தொங்குபாலம் அறுந்து விழுந்து 5 பேர் பலி.. சீனாவில் சோகம்!
5 people dead as a suspension bridge collapses Shock in China
சீனாவில் பாலத்தின் கேபிள் திடீரென அறுந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் சுற்றுலா நகரம் ஆகும். இங்குள்ள மலைகள் நிறைந்த அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்து விழுந்ததில் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.
இதற்கிடையே அந்த பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளது.இந்த விபத்தில் பலியானோருக்கு சீன அதிபர் ஜின்பிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
English Summary
5 people dead as a suspension bridge collapses Shock in China