தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு..வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
Tuticorin girl sexual case 20 years imprisonment for the youth
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் யோனஸ் என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இவ்வழக்கின் விசாரணை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி யோனஸ் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பு தீர்ப்பு தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் , குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் , விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.
English Summary
Tuticorin girl sexual case 20 years imprisonment for the youth