எடப்பாடி சொல்லை தட்டாத செங்கோட்டையன்! கருப்பு பட்டையுடன் செங்கோட்டையன்!அதிமுகவில் செங்கோட்டையன் பஞ்சாயத்து ஓவர்? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்து பங்கேற்றனர். கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கருப்பு பட்டையுடன் வந்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் கருப்பு பட்டை அணியாமல் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது.

இதனிடையே, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று சட்டசபையில் கருப்பு பட்டையுடன் வந்திருந்தார். இது, அவர் மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

நேற்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக்கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். ஆனால், இன்று அதே எடப்பாடியின் உத்தரவுப்படி கருப்பு பட்டையுடன் சட்டசபையில் கலந்து கொண்டு பின்னர் வெளிநடப்பிலும் இணைந்தார்.

இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவாக பதிலளித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கவில்லை என கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழு அதிமுக குழுவும் வெளிநடப்பு செய்தது.

முக்கியமாக, பன்னீர்செல்வம் மட்டும் அவையில் இருந்தபடியே இருந்தார். இது, அதிமுகவில் உள்ள உள் பிளவு இன்னும் தொடர்கிறது என்பதற்கான சுட்டுக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே உறவு சரியாக இல்லை எனவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் செங்கோட்டையன் மீண்டும் அணியில் இணைவாரா என ஆர்வம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.இன்றைய சட்டசபை நிகழ்வுகள், அதிமுகவின் உள் அரசியல் மாற்றங்கள் குறித்து புதிய சிக்னலாகக் கருதப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Red Fort man who doesnot say the word Edappadi The Red Fort man with the black belt Is Panchayat over in AIADMK


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->