கரூர் துயர சம்பவத்துக்கு 90% காரணம் விஜய் தான்! – அதிமுக, தவெக இணைந்தால் ஆட்சி மாற்றம் கன்பார்ம்! மூத்த பத்திரிகையாளர் மணி!
Vijay is 90 percentage responsible for the Karur tragedy AIADMK Thaveka will confirm a change of government if they merge Senior journalist Mani
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்ந்து அரசியல் அதிர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி வலுவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “இந்த சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான், முழு பொறுப்பையும் அவர் ஏற்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், “ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த துயரச் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கான ஆதரவு ஒரு சதவீதமும் குறையவில்லை… மாறாக அரசு மீதுதான் கோபம் திரும்பியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
மணி தனது பேட்டியில் மேலும் கூறியதாவது —“சம்பவம் நடந்த உடனே விஜய் சம்பவ இடத்திலிருந்து நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சியினரும் மருத்துவமனைகளில் இருந்தபோது, விஜய்யின் கட்சியினர் மட்டும் காணப்படவில்லை. இதனால் தான் தவெக கட்சி ஒரு அடியை பின்னோக்கி போய்விட்டது,” என்றார்.
அவர் மேலும் கூறினார்:“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில வீடியோக்கள், சில பேட்டிகள் தவிர மீடியா முன் எந்த உறுதிப்பாடும் இல்லை. இது ஒரு அரசியல் கட்சித் தலைவராகிய விஜய்க்கு மிகப் பெரிய குறைபாடாகும்.”
மணி தெரிவித்த முக்கியமான கருத்து என்னவெனில் —“இந்த விபத்துக்கு காரணம் விஜய்தான் என்றாலும், மக்கள் அவர்மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக அரசின் செயலின்மையே காரணம் என்ற கோபமே அதிகமாகியுள்ளது. இதுதான் திமுக அரசு கவலைப்பட வேண்டிய விஷயம். மக்கள் கோபம் விஜய்க்கு திரும்பாமல், அரசின் மீது திரும்பியுள்ளது என்பது அரசியல் ரீதியாக ஆபத்தானது,” என்றார்.
அதே நேரத்தில் அவர் எச்சரித்தார்:“விஜய்யிடம் சில பிழைகள் உள்ளன. அவற்றை திருத்திக் கொள்ளாவிட்டால், நாளை அவர் மீதான கரிசனம் வெறுப்பாக மாறும் வாய்ப்பும் உண்டு. இதை அரசியல் ரீதியாக திமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
அரசியல் கூட்டணிகள் குறித்து பேசிய மணி,“தவெக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. பாஜகவும் அதில் சேர்ந்தால், அது ஒரு அரசியல் சுனாமியாக இருக்கும். ஆனால் அதிமுக-விஜய் கூட்டணியாக இருந்தாலும் ஆட்சியை கைப்பற்றுவது நிச்சயம்,” என உறுதியாக கூறினார்.
முடிவாக அவர் வலியுறுத்தியதாவது —“மக்களிடம் கோபம் விஜய்க்கு அல்ல, அரசுக்கு தான். இது தான் திமுக அரசு திருத்த வேண்டிய மிக முக்கியமான செய்தி. 41 உயிர்கள் போய்விட்டன, இனி இது மீண்டும் நடக்காதபடி விஜயோ அரசோ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
English Summary
Vijay is 90 percentage responsible for the Karur tragedy AIADMK Thaveka will confirm a change of government if they merge Senior journalist Mani