என்ன irritate பண்ண ஒரே நடிகை இவங்கதான்...! - மனம் திறந்த நடிகர் ஷாம்
only actress who irritates me Open minded actor Sham
நடிகர் ஷாம் அண்மையில் பேட்டியளித்தபோது தனக்கு பிடிக்காத நடிககை இவர்தான் என்று ஒரு நடிகையை குறிப்பிட்டார் .அவர் தெரிவிக்கையில்,"எனக்கு பிடிக்காத நடிகை என்றால் அது நடிகை ''லைலா'' தான் என்று சொல்லலாம்.

நாங்கள் இணைத்து நடித்த 'உள்ளம் கேட்குதே' படத்தில் ஒரு மாதிரி (irritating )தொந்தரவு செய்யும் கடுப்பேத்தும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க என்னை 'டார்ச்சர்' செய்வார்.இதனால் ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.
ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் ஜாலியான ஆள். நல்ல மனம் கொண்ட நடிகை" என்று தெரிவித்தார். நடிகை லைலா அவர்கள் கொஞ்சல் பேச்சு, துருதுரு நடிப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை.
லைலா அவர்கள் தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும், திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிய அவர், கார்த்தியின் 'சர்தார்' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்தார்.
கடைசியாக விஜய்யுடன் 'தி கோட்' படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் லைலா குறித்து நடிகர் ஷாம் பகிர்ந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
only actress who irritates me Open minded actor Sham