பொள்ளாச்சியில் நகை பறிப்பு பரபரப்பு! - சிசிடிவி வீடியோவில் சிக்கிய கேரள திருடர்கள்...!
Jewelry robbery Pollachi Kerala thieves caught CCTV video
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றது. மொபைலில் பேசிக்கொண்டு சாலையோரம் நடந்து சென்ற பெண் ஒருவரை குறிவைத்த மர்ம பைக் கும்பல், மின்னல் வேகத்தில் அவரின் நகையை பறித்து தப்பிச் சென்றது.

அந்த நகை கவரிங் நகை எனினும், சம்பவம் நடந்து சென்ற விதம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே போலீசார் சம்பவ இடத்தை அடைந்து, அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை ஆரம்பித்தனர்.மேலும், சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்ததில், பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதியானது.
தொடர்ந்து நடத்திய வேகமான நடவடிக்கையில், போலீசார் கேரளாவைச் சேர்ந்த கோகுல் தாஸ் (26) மற்றும் அமல் (25) ஆகிய இருவரையும் சுரண்டையில் மாட்டினர்.இதில் இருவரும் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நகையும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Jewelry robbery Pollachi Kerala thieves caught CCTV video