மெகா கூட்டணி? அண்ணாமலை குறித்து ஒரு கேள்வி? நழுவிய ஜெயக்குமார்!
Jayakumar Say About Annamalai and New ADMK Alliance
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தாவது, "ஆதித்தனார் அவர்களின் புகழை இந்த தமிழ் கூறும் நல் உலகம் என்றைக்கும் போற்றப்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம்முடைய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள், ஆதித்தனார் அவர்களுக்கு சிலையை நிறுவி திறந்து வைத்தார்.
அந்த ஒரு அடிப்படையில் நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, தமிழர் தந்தையின் பெருமை இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எந்த கருத்தும் நான் தெரிவிக்க விரும்பவில்லை.

எங்களுக்கு எந்த குழப்பமும் கிடையாது ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து விட்டோம். அது பற்றி நாங்கள் மேலும் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை" என்றார்.
அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியும், பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்.
தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை. கட்சியைப் பொருத்தவரை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம்" என்றார்.
கூட்டணியிலிருந்து அதிமுக விலகி உள்ளதால் அண்ணாமலைக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "அது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய நிலைப்படை தான் நாங்கள் சொல்ல முடியும்" என்று ஜெயக்குமார் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.
English Summary
Jayakumar Say About Annamalai and New ADMK Alliance