அ.தி.மு.க சி.எஸ்.கே. மாதிரி - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. 

அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்துக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி கூறியது அ.தி.மு.க.வின் கருத்து அல்ல என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியாகத்தான் செயல்படுகிறார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014-ல் பா.ஜ.க. கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?

பிரதமர் மோடியை 8 முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க.வால் வெல்ல முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.சி.பி. அணி போன்றது; தோற்று கொண்டே தான் இருக்கும். அ.தி.மு.க., சி.எஸ்.கே. மாதிரி; 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம்.

எஸ்.பி வேலுமணி கூறியது அவரது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது. அதற்கு பதில் சொல்ல முடியாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களைத்தான் நாங்கள் விமர்சனம் செய்தோம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். அ.தி.மு.க. தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தில் ஆட்சி செய்யப் போகிற கட்சியும் அ.தி.மு.க. தான்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->