ஜல்லிக்கட்டு விவகாரம் | நாங்க அங்கீகரிக்கவே இல்லை - மத்திய அரசு பகீர்! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கவில்லை என்று, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.

அதில், கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் 'கேலோ இந்தியா திட்டம்' உள்ளிட்ட எந்த திட்டத்திலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போன்ற கலாச்சார நிகழ்வுகளை ஊக்குவிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அனுராகூர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக கருதாமல், கலாச்சார நிகழ்வாக கருதுவதால், அதனை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu mattu vandi race Central Govt info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->