ரத்தினக் கம்பளம் அல்ல;  பாசிச ரத்தக் கம்பளம் ..EPS யை விமரிசித்த அமைச்சர் கே.என்.நேரு! 
                                    
                                    
                                   Its not a diamond blanket its a fascist blood blanket  Minister KN Nehru criticized EPS
 
                                 
                               
                                
                                      
                                            திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விரசித்துள்ளார்.
இதுகுறித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் . 'சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்!', 'மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!', எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம் என கடுமையாக விமரிசித்துள்ளார்.
பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது கைகூடவில்லை. பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி' என்றெல்லாம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உருட்டிக் கொண்டே இருந்தார்.
கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். அப்போது எடப்பாடி பழனிசாமி நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல அமித்ஷா பக்கத்தில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விரித்திருப்பது ‘ரத்தினக் கம்பளம் அல்ல; பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்’ என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
“திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமிக்கு பாஜகவை விமர்சிக்க அருகதையே இல்லை. கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்திருக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.
2024 தேர்தலில் தோல்வியடைந்த பாஜக-அதிமுக கூட்டணி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்படும் என்றும், “மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அரியணையில் அமர்வார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Its not a diamond blanket its a fascist blood blanket  Minister KN Nehru criticized EPS