#கோவை || அமைச்சரின் நெருங்கிய நண்பர் வீட்டில் ஐ.டி ரெய்டு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீ தக்ஷா பிராப்பர்ட்டீஸ் & டெவலப்மெண்ட் பிரைவேட் நிறுவன மேலாண் இயக்குனர் மோகன் என்பவர் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை!

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் இன்று கோவை மாவட்டம் வடவள்ளி கொண்டாமுத்தூர் சாலையில் குருசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள மோகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று வடவள்ளி மருதமலை சாலையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்திலும் நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவரது வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அந்த சொத்திற்கு இவர் உரிய வருமான வரி செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மோகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பராக மோகன் இருந்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Itraid at minister close friend house in Coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->