#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சற்று முன்பு அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் அலுவலகத்திற்கு சற்றுமுன் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரின் நண்பர், உறவினர்கள், திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் மட்டுமே வருமானவரி வருமானவரி சோதனை நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையை தொடங்கியுள்ளனர்.

கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த வருமான வரி துறை சோதனை என்பது, செந்தில் பாலாஜியை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது.

ஆனால், செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் இதுவரை வருமான வரி சோதனை நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IT Raid In Senthil Balaji office may 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->