பண்ணை வீட்டில், ஐடி ஊழியர்கள் செய்த காரியம்.! கொரோனாவால் உண்டான குஷி.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தி இருக்கின்றனர். யாரும் அலுவலகம் வர வேண்டாம் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பெங்களூரு ஐடி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தேனி அருகில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் இயற்கையான சூழ்நிலையில் தங்களுடைய பணிகளை செய்து வருகின்றனர். தேனி அருகே இருக்கும் அனுமந்தன்பட்டி என்ற பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர், பெங்களூரில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருகின்றார். 

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தி வந்த நிலையில், தன்னுடைய தலைமையிலான எட்டு ஊழியர்களை அவர் தன்னுடைய பண்ணை தோட்டத்தில் தங்க வைத்து அங்கிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார். 

அந்த ஊழியர்களுக்கும் இது புதுமையான அனுபவமாக இருப்பதால், மிகவும் ஜாலியாக வேலை பார்க்கின்றனர். மேலும், இளநீர் உட்பட இயற்கை உணவுகளை சாப்பிட்டு கொண்டே இயற்கை காற்றுடன் ஆரோக்கியமாக வேலை செய்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT employees works at Form house in Theni


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal