கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? பரிசோதித்தால்.. குண்டர் சட்டத்தில் கைது.! - Seithipunal
Seithipunal


கருவில் இருக்கும் சிசு கண்டறிந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கொ.மாரிமுத்து தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிதல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறிந்து சொல்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

 மேலும் கருகலைப்பு செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மீண்டும் குழந்தை பேறு கேள்விக்குறியாகும். சட்ட விரோதமாக கருகலைப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is the fetus male? Girl? If tested .. arrested under the Thugs Act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->