சேலத்தில் பரபரப்பு...! கூடுதலா 10 ரூபாய் கேப்பியா...? - டாஸ்மாக் ஊழியருக்கு தர்மஅடி கொடுத்த முதியவர்...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பூலாவரி அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் விற்பனை நிலையத்தில் மேச்சேரியைச் சேர்ந்த பற்குணன் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று அந்த கடையில் வழக்கத்தை விட அதிகளவில் வாடிக்கையாளர்கள் திரண்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மதுபானம் வாங்குவதற்காக கடைக்கு வந்தார்.

அவர் ஒரு மதுபாட்டிலை வாங்கியபோது, காலி பாட்டிலை மீள ஒப்படைப்பதற்கான ரூ.10 மதிப்பிலான திருப்பிச் செலுத்தும் குறியீட்டு ஒட்டையை விற்பனையாளர் பற்குணன் பாட்டிலில் ஒட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, மதுபாட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்த ரூ.140 மட்டுமே வழங்குவேன் என்றும், கூடுதலாக ரூ.10 செலுத்த முடியாது என்றும் முதியவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முதியவர் திடீரென காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி, விற்பனையாளர் பற்குணனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், டாஸ்மாக் விற்பனையாளரை முதியவர் செருப்பால் தாக்கும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it extra 10 rupees old man who slapped TASMAC employee selam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->