பயன்பாட்டிற்கு வரும் புதிய ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி புது திட்டம்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக தயாரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள், நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு கிழிவதும், அழுக்கடைவதும், சில நேரங்களில் பாவனைக்கு உதவாத வகையில் உள்ளது. இதற்கு பதிலாக, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிக்கை ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது. நீண்டகால பயன்பாட்டிற்காக பையாக்சியலி ஓரியண்டட் பாலிபுரோப்பிலீன் (Biaxially Oriented Polypropylene - BOPP) வகை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நோட்டுகள், காகித நோட்டுகளை விட 02 முதல் 04 மடங்கு அதிக நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நோட்டுகள் கிழிவது, ஈரமாவது மற்றும் அழுக்கடைவது போன்றவை குறைவாக இருக்கும். அதேநேரம் இதில், தெளிவான பாதுகாப்பு வடிவமைப்பு, ஹோலோகிராம், சிறப்பு மை உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவதால், கள்ளநோட்டுகளை தயாரிப்பது மிகவும் கடினமாகும். இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை ஏற்கனவே, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும், கடந்த 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது, உலகளாவிய டெண்டர் மூலம் பிளாஸ்டிக் தாள்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை RBI தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Rs10 and Rs 20 plastic notes coming into use Reserve Banks new plan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->