"பாதுகாப்பு கேட்ட இளைஞர் படுகொலை": தவெக அரசைச் சாடி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
Udhayanidhi Stalin Slams TN Govt Over Thiruvottiyur Murder Questions Police Accountability and Law Order
சென்னை திருவொற்றியூரில் காவல்துறை பாதுகாப்பு கோரிய பிரதீப்ராஜ் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகரில் மீண்டும் இதுபோன்ற படுகொலைகள் நிகழாமல் இருக்க அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரங்கள்:
அச்சுறுத்தல் மற்றும் படுகொலை: கடன் தொல்லை காரணமாகத் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் என்ற இளைஞர் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை "உயிரோடு இருக்க மாட்டாய், பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டியதாகத் தெரிவித்திருந்தார்.
காவல்துறை அதிகாரம் குறித்து கேள்வி: "வேண்டுமானால் முதலமைச்சரிடம் போய் சொல்லிக்கொள்; என்னை ஒன்றும் செய்ய முடியாது" என அந்த ஆய்வாளர் கூறியதாகப் பிரதீப்ராஜ் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சரைக் காவல்துறையினரே ஒரு 'DUMMY CM' ஆக நினைக்கிறார்களா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுக்குக் கண்டனம்: காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை விவாதம் சுட்டிக்காட்டு: சட்டமன்றத்தில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், '1974-இல் என்ன நடந்தது, ED என்ன பண்ணியது' என்று பழைய சம்பவங்களைப் பேசி திசைதிருப்பும் முதலமைச்சர், இந்த படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அவர் வினவத்துள்ளார்.
ஆய்வாளர் மீது வழக்குக்கோரிக்கை: பிரதீப்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்படச் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin Slams TN Govt Over Thiruvottiyur Murder Questions Police Accountability and Law Order