'ஈரான் பயணத்தை ஒத்தி வைக்கவும்'; இந்தியர்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல்கள் தொடுத்து வருவதால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், ஈரானில் நிலவும் இந்த பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது, எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியர் பாதுகாப்புச் சூழல் சீரடையும் வரை பயணத்தை ஒத்தி வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கெனவே, ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமானச் சேவைகளைப் பயன்படுத்தி அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், ஈரானிலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்யும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் எவரேனும் தூதரகத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யாமல் இருந்தால், உடனடியாக பதிவு செய்யும்படி இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Embassy in Iran advises Indians to postpone travel to Iran


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->