37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாணவர்கள்; பிரதமர் மோடி பாராட்டு..! - Seithipunal
Seithipunal


37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டி லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற 04 இந்திய மாணவர்கள் அடங்கிய குழு, அனைத்துப் பிரிவுகளிலும் 1 தங்கம் உட்பட 03 வெள்ளி பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்த சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்டில் தங்கம் மற்றும் அனைத்து பிரிகளிலும் பதக்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவரது வாழ்த்து செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''லித்துவேனியாவின் வில்னியஸில் நடைபெற்ற 37வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில், ஒரு தங்கம் உட்பட இந்திய அணியின் நான்கு உறுப்பினர்களும் பதக்கங்களை வென்றது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

ஒலிம்பியாடில் வெற்றி பெற்ற பவ்யா குன்வால், சௌமில் மைட்டி, நிஷித் கலானி மற்றும் அன்மோல் குமார் ஆகியோரை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்வேதியியல், விலங்கு உடலியல், விலங்கு உருவவியல் மற்றும் வகைப்பாட்டியல், அத்துடன் தாவரக் கணக்கீட்டு உயிரியல் போன்ற பாடங்களில் அவர்கள் அபாரமான அறிவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வெற்றி இன்னும் பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய அளவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இளைஞர்களின் ஆர்வத்தை அதிகரிக்க இதுபோன்ற ஒலிம்பியாட் போட்டிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi congratulates Indian students who won gold at the 37th International Biology Olympiad


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->