14 பேரின் மரண ஓலத்திற்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
Info 14 people death because firecrackers godown back door was locked
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை இயங்கி வந்தது. இந்த பட்டாசு கடையில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது.
இதனால் பட்டாசு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மற்றும் 2 கனரக வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்ட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீ விபத்து சம்பவம் குறித்து பெங்களூரு புறநகர் எஸ்.பி தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வருவாய்த் துறையினர், மருத்துவ துறையினர், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சம்பவம் நடைபெற்ற பட்டாசு கடையில் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பட்டாசு கடை செயல்பட அனுமதி பெறப்பட்டுள்ளதா? பட்டாசு கடையானது குடியிருப்பு பகுதியிலிருந்து 200 அடி தொலைவில் அமைக்க அனுமதி வழங்கியது யார்? என்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடையின் உரிமையாளர் குடோனின் பின்பக்க கதவை எப்போதும் பூட்டி வைத்திருந்ததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனவும், பின்புற கதவு பூட்டி இருந்ததால் குடோனுக்குள் சிக்கி இருந்த 14 பேரும் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
English Summary
Info 14 people death because firecrackers godown back door was locked