கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி உடனடியாக வெளியிட வேண்டும்: மதுரை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்..!
Indian Democratic Youth Association members protest by besieging the Madurai regional office demanding immediate publication of the Keezhadi research report without any corrections
அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், மத்திய அரசு கூறியதுபோல திருத்தங்கள் எதுவும் செய்யக்கூடாது கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குறித்த போராட்டத்தின் போது இரும்பு கதவுகளின் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
மதுரை டிபிகுளம் சாலையில் உள்ள மதுரை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கிட்டதட்ட 50 மேலானோர் இந்த முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் தற்போது வாசலில் அமர்ந்து கீழடி ஆய்வறிக்கை தொடர்பான போராட்டத்தை நடத்தி வருவதால் அங்கு காவல் துறையினரும் வருமான வரி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Indian Democratic Youth Association members protest by besieging the Madurai regional office demanding immediate publication of the Keezhadi research report without any corrections