தமிழகத்தில் காவல்துறையால் தேடப்படும் நபர்கள் பாஜகவில் தான் உள்ளார்கள் - இரா.முத்தரசன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

"ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால், நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதுகுறித்து, ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்காக அந்த அமைப்புகள் காத்திருக்கின்றன. 

ஒன்றிய அரசு அரசியல் அமைப்பை சீர்குலைத்து வரும் விதமாகவே தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இதற்காக உச்சநீதி மன்றமும் கேள்வி எழுப்பி வருகிறது.

சமீபத்தில் ஆளுநர் ரவி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் தான் ஒற்றுமைப்படுத்தியது என்று பேசினார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் தான் மக்களை பிளவுபடுத்தி உள்ளது.

இப்படி பேசுவதற்கு பதிலாக ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து செயல்படலாம். அதேபோல், ஒன்றிய அரசும் அவரை பதவியில் இருந்து நீக்கி திரும்ப பெற வேண்டும்.

அடுத்த மாதம் 29-ந்தேதி ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இதுமட்டுமல்லாமல், நாளை நாடு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியும் நடத்தப்பட உள்ளது. 

மின் இணைப்பு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அது முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க மாட்டோம், மின் இணைப்பை துண்டிப்போம் என்ற முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும். 

மேலும், தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் காவல் துறையால் தேடப்படும் நபர்கள் தற்போது பா.ஜ.க.வில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தது மட்டுமல்லாமல் உயர் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian communiest party state Secretary R mutharasan press meet


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal