சென்னை ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு! ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தின் பெருமானம் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

குறிப்பாக புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான செங்குன்றம் மற்றும் பொன்னேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 192 கன அடியாக இருந்த நிலையில் நேற்று முதல் வினாடிக்கு 227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

அதேபோன்று சென்னையில் மற்றொரு நீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 194 அடியாக இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 257 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அதேபோன்று கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று வரை 20 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்பொழுது 30 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வதால் வெளியேற்றப்படும் உபநீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in water flow to Chennai lakes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->