தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது முதியவர்.! விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில். தற்போது நடைபெற்றுள்ள துயரம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிலாப்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவியின் பெயர் முனியம்மாள் (வயது 70). 

இதே ஊர் பகுதியை சார்ந்த துரைசாமி என்பவரது மகனின் பெயர் ஜானகிராமன் (வயது 73). சம்பவத்தன்று முனியம்மாள் வீட்டில் தனியாக படுத்து உறங்கிக்கொண்டு இருந்த நிலையில்., ஜானகிராமன் முனியம்மாள் இல்லத்திற்கு சென்று முனியம்மாளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

இந்த விஷயத்தை முனியம்மாள் தனது மகளிடம் தெரிவித்த நிலையில்., இது குறித்து முனியம்மாள் மகள் ஜானகிராமனிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஜானகிராமன் கொலை மிரட்டல் விடுத்தும்., அவதூறாக பேசியும் உள்ளான்.

sexual harassment, sexual abuse, sexual torture,

இதனையடுத்து வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாயாரை அங்குள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., இது குறித்து அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவரின் புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரி., விசாரணை மேற்கொண்டு ஜானகிராமனை கைது செய்து கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram lady rapped by old man police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal