பிளாக்கில் மதுவாங்க வந்த இடத்தில் சண்டை... இளைஞரை போட்டுத்தள்ளிய கும்பல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஐயப்பன் (வயது 22). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை நேரத்தில் மது அருந்துவதற்கு திட்டமிட்டுள்ளார். 

இவரின் திட்டப்படி ஐயப்பனின் நண்பருடன் மது வாங்குவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த சமயத்தில், வேலூர் - ஆற்காடு சாலையருகே இவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் ஐயப்பனை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதுமட்டுமல்லாது ஐயப்பனை கத்தியால் குத்திய மர்ம கும்பல், கல்லை எடுத்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சைதாபேட்டை பகுதியில் ஐயப்பன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நேரத்தில், மது வாங்க வந்த நபர்களுக்கும் - ஐயப்பனுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore youngster murder police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal