முறையற்ற பழக்கம் வாழ்க்கையை முடித்த சோகம்.. அனாதையாக தெருவில் நிற்கும் 7 மாத குழந்தை.. தாய்..!! திருச்சியில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூர் பிஷப்குளம் பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகனின் பெயர் ரமேஷ் (வயது 31). இவன் சொந்தமாக காரொன்று வாங்கி ஓட்டிவந்த நிலையில், தென்னுர் இனாம்தோப்பு பகுதியை சார்ந்தவர் காவியா (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இவர்களின் திருமணம் கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தின் போது திருமணம் நடைபெற்று முடிந்து, இவர்கள் இருவரும் 7 மாதமாகும் ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், ரமேஷ் இளம்பெண்ணொருவருடன் முத்தரசநல்லூர் காவிரி கரைக்கு காரில் வந்து, பெண்ணுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திடீரென வாயில் நுரைதள்ளி கீழே விழுந்து மயக்கமடைந்து இருந்துள்ளனர். இப்பகுதிக்கு குளிக்க வந்த நபர்கள், இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரும் உயிரிழந்திருப்பதை உறுதி செய்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இவர்களிடம் இருந்து இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், ரமேஷுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்மணி திருச்சி தென்னுர் சங்கீதபுரம் பகுதியை சார்ந்த அந்தோணி என்பவரின் மகள் ரீனா (வயது 18) என்பதும், புத்தூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த நேரத்தில், ரமேஷுடைய காரில் சென்று வந்த போது காதல் மலர்ந்துள்ளது. இருப்பினும் இவைகளின் தற்கொலைக்கு காரணங்கள் ஏதும் சரிவர தெரியவில்லை. 

காவல் துறையினரின் விசாரணையில் ரமேஷிற்கு திருமணத்திற்கு முன்னதாகவே பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாகவும், இது தொடர்பான பல புகார்கள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. இவர்களை விஷம் கொடுத்து யாரும் கொலை செய்தனரா? இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? ரமேஷால் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்தாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரமேஷின் மனைவி மற்றும் அவரது ஏழுமாத குழந்தையின் நிலைமை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tricy illegal affair couple suicide died


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal