டிக் டாக் நாடகக்காதல்.. கணவன் மீது மனிதாபிமானத்துடன் கண்ணீருடன் புகார் அளித்த மனைவி... விசாரணையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலி நம்மிடையே ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருந்தாலும், டிக் டாக் செயலியில் ரோமியோக்கள் போல திரியும் நபர்கள், அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையில், இவர்களிடம் இளம்பெண்கள் நாடக்காதலால் அப்பாவித்தனமாக ஏமார்ந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. 

டிக் டாக் செயலியில் சண்டிகர் போல வேடமிட்டு இளம்பெண்களை தொடர்ந்து மயக்கி வரும் நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். டிக் டாக் சண்டிகர் மற்றும் சாலையோர ரோமியோவின் பெயர் ராஜசேகர். இவருக்கு கடந்த 2014 ஆம் வருடத்தில் சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து, இவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. 

இந்த நிலையில், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு திரிந்து கொண்டு இருந்த ராஜசேகர், டிக் டாக் செயலில் கணக்கொன்றை துவக்கி பல பெண்களை நாடககாதலால் ஏமாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை அவரது மனைவியே தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர் பிரபல நடிகரான விஜய் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடோடு இருந்துவிட்டு, தன்னை ரீல் நடிகர் போல சித்தரித்து டிக் டாக் செயலியில் செய்து வந்த நாடகக்காதலின் திறமையால் பல பெண்களை மயக்கியுள்ளார் என்ற பகீர் குற்றசாட்டை சுகன்யா முன்வைத்துள்ளார். மேலும், ராஜசேகரை தேடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சார்ந்த காவல் துறையினர் அவரது இல்லத்திற்கும் சென்றுள்ளனர். 

அந்த நேரத்தில், அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த கவிநயா என்ற இளம்பெண்ணை டிக் டாக் மூலமாக சாலையோர ரோமியோ ராஜசேகர் நாடகக்காதல் வலைவிரித்த சம்பவமும், இந்த வலையில் விழுந்த கவிநயாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை காவல் துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.  

மேலும், ராஜசேகரின் லீலையை முன்னதாகவே தெரிந்து கொண்ட சுகன்யா, பிற பெண்களின் வாழ்க்கையை கருதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் இருவரையும் அழைத்து பேசி கண்டித்து அனுப்பியுள்ள நிலையில், தற்போது இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சுகன்யா தெரிவித்துள்ளார். 

தற்போது புதுக்கோட்டை அறந்தாங்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தனக்கும் - தன் குழந்தைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கண்ணீருடன் சுகன்யா புகார் அளித்துள்ளார். மேலும், இவனின் உண்மை நிலை அறியாது பல பெண்கள் வாழ்க்கையை பறிகொடுத்து, வெளியே சொல்ல இயலாமல் தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொழுதுபோக்கு செயலியை பொழுதை போக்க மட்டும் உபயோகம் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tic tok girl cheated by drama lover police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal