மீண்டும் உயர்வைக் கண்ட தங்கம் விலை ...! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை மாற்றம் கண்டது. காலை நேரத்தில் விலை சரிவை சந்தித்த தங்கம், மாலை நேரத்தில் திடீர் ஏற்றத்துடன் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

இதன்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை காலை ரூ.60 குறைந்த நிலையில் இருந்தாலும், மாலையில் ரூ.80 உயர்ந்து ரூ.12,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800 என்ற அளவுக்கு சென்றது.அதேபோல் வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.257-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.2,57,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலை தொடர்ந்தே இன்று மீண்டும் தங்கம் விலையில் ஏற்றம் பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440 என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.

வெள்ளி விலையும் இன்று கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கு விற்பனையாக, ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அரசியல் பதற்றங்கள், குறிப்பாக வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளதால், வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices saw increase today Do you know today price


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->