பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? இதுதான் உங்கள் சமத்துவ சமூக நீதியா? பின்னணியில் திமுக, பாஜக - பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக்குழு (CBFC) சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதைக் கண்டிக்கிறேன்.இதற்குப் பெயர்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் மறைமுகக் கூட்டணி. 

ஒரு படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, கடந்த மாதமே முறைப்படி சமர்ப்பித்த பின்னரும் இன்றளவும் தணிக்கைச் சான்றிதழ் தரவில்லை. இதுதான் உங்கள் ஜனநாயகமா?

திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் வலிகளையும் உரக்கச் சொல்லும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு படைப்பாளி தனது கருத்தைச் சுதந்திரமாகச் சொல்லும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

அரசியல் கருத்து முரண்பாடுகள் இருப்பின் அதை மக்கள் மன்றத்தில் முடிவுக்கு விட வேண்டுமே தவிர, அதிகாரத்தைக் கொண்டு ஒரு படைப்பை முடக்குவது ஜனநாயகப் படுகொலையாகும்.

ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் தயாரிப்பாளர், இயக்குனர் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், கோடிக்கணக்கான முதலீடும் உள்ளது. அனைத்து வேலைகளையும் சட்டப்படி நிறைவு செய்தும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது பலநூறு குடும்பங்களின் உழைப்பை நசுக்குவதற்குச் சமம்.

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுப் படங்களுக்கு எளிதாகச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. ஆனால், 'ஜனநாயகன்' போன்ற படங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எதற்கு இந்த அரசியல் ஓரவஞ்சனை? தணிக்கைக்குழு எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk ramesh condemn to censer board jana nayagan issue pongal dmk bjp


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->