அமெரிக்காவில் இந்திய இளம்பெண் படுகொலை; தமிழகத்தில் பதுங்கிய முன்னாள் காதலன் கைது..!
The friend who murdered a young Indian woman in the US has been arrested in Tamil Nadu
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தரவு பகுப்பாய்வு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய இளம்பெண் நிகிதா ராவ் கொதிஷாலா என்ற 27 வயதுடைய தெலுங்கு பேசும் பெண் கடந்த 02-ந்தேதி காணாமல் போனதாக கூறப்பட்டது.
இதுபற்றி கொதிஷாலா முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) என்பவர், ஹோவர்டு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், கொதிஷாலா கடுமையாக தாக்கப்பட்டு, பல்வேறு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளதை போலீசார் கண்டுப் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை கொதிஷாலா படுகொலையில் அர்ஜுனுக்கு தொடர்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சர்வதேச அளவில் அவரை தேட தொடங்கினர். இந்நிலையில், இன்று தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் பணியும் நடைபெற உள்ளது. இதேநேரத்தில் சமீபத்தில் தான் கொதிஷாலா, பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து ஆல்-இன் விருது வாங்கினார் என குடும்பத்தினர் தெரிவித்த்துள்ளனர். கொதிஷாலாவின் படுகொலை குறித்து மேரிலேண்ட் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
English Summary
The friend who murdered a young Indian woman in the US has been arrested in Tamil Nadu