மணல் கொள்ளையை தட்டி கேட்ட வாலிபரை, ஓடவிட்டு கொலை செய்த கொடூரம்.. திருநெல்வேலியில் பேரதிர்ச்சி.!!
in thriunelveli youngster murder due to banned sand theft
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி இடையன்குளம் அருகேயுள்ள வடக்கு எருக்கலம்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜேசுதாசன்.. இவரது மகனின் பெயர் ரூபன் வேதத்துரை (வயது 32). இவர் விவசாய கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் யோகேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் ஒரு வயதாகும் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நேற்று மதியத்தின் போது ரூபன் அங்குள்ள குளத்தில் குளிப்பதற்கு தனது மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சமயத்தில், இவரை குளத்திற்கு முன்னர் மறித்த மர்ம நபர்கள் ஓடஓட சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இதனால் பலத்த காயமுற்ற ரூபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் அங்குள்ள பொதுமக்கள் வருவதை கண்டு அங்கிருந்து மர்ம கும்பல் தப்பியோடவே, இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில், இடையன்குளம் பகுதியை சார்ந்த தங்கசாமி குளத்தில் மண் அள்ளியுள்ளார்.
இதனை கண்ட ரூபன் தனது நபர்களுடன் சென்று மண் அள்ளுவதை தொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் தங்கசாமி, சுரேஷ் மற்றும் எட்வின் ஆகிய மூவரும் சேர்ந்து ரூபனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thriunelveli youngster murder due to banned sand theft