சிறுமியை நாடகக்காதலால் ஏமாற்றி நண்பர்களுக்கு இரையாக்கிய காமுக நாடக காதலன்.. திருவாரூரில் கைதான கும்பல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னலூர் கிராம பகுதியை சார்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவரது பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் இல்லத்திற்கு எதிரே உள்ள இல்லத்தில் ஜான்சன் என்பவன் வசித்து வந்துள்ளான். ஜான்சனின் இல்லத்திற்கு அவனது நண்பனான கார்த்திக் என்பவன் அடிக்கடி வந்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளான். 

இந்த நேரத்தில், சிறுமிக்கும் - கார்த்திக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறுவது போல நடித்த கார்த்திக், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இதனை பயன்படுத்தி சிறுமியிடம் அவ்வப்போது ஆசை வார்த்தை கூறிய காமுகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனைப்போன்று அவ்வப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்த கொடுத்ததும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

கார்த்திக்கின் இந்த செயலை அறிந்த ஜான்சன் மற்றும் அவனது மற்றொரு நண்பன் விஸ்வநாத் கார்த்திக்கின் உடந்தையுடன் சிறுமியை கடந்த நான்கு மாதமாக குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளனர். இந்த நேரத்தில், சிறுமியின் உடல் நிலையானது கடந்த சில நாட்களாக கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு பெற்றோர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதன்பின்னர் சிறுமியிடம் விசாரித்த நேரத்தில் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜான்சன் மற்றும் விஸ்வநாதன் தலைமறைவாகினர். இவர்களை தேடி வந்த காவல் துறையினர் இருவரையும் இன்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Thiruvarur child sexual abuse drama lover and his friends arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal