வரவுக்கு மீறிய செலவு.. வரம்புக்கு மீறிய கடன்.. அவமானத்தால் பெண்மணி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி ஊர்க்காடு பகுதியை சார்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவியின் பெயர் பழனியம்மாள் (வயது 30). முத்துராமலிங்கம் கேரள மாநிலத்தில் உள்ள உணவகத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். 

பழனியம்மாள் தனது குழந்தைகளுடன் ஊர்க்காட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பழனியம்மாள் தனியார் மகளிர் குழுவில் கடன் வாங்கிய நிலையில், இந்த கடனை கொடுக்க பல்வேறு இடத்தில் கடன் கேட்டுள்ளார்.

இவர் வாங்கிய கடனை திருப்பி தர இயலாது தவித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று மகளிர் குழுவில் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். இது தொடர்பான விஷயத்தை பழனியம்மாள் தனது கணவரிடம் தெரியப்படுத்தியுள்ளார். 

இதனைக்கேட்ட முத்துராமலிங்கம் பழனியம்மாளை திட்டவே, கடுமையான விரக்திக்கு உள்ளான பெண்மணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தீயின் வெப்பம் தாங்காது பின்னர் அலறவே, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனியம்மாளை மீட்டுள்ளனர். 

பின்னர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli girl suicide due to marriage problem


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal