மது, சூது பழக்கத்திற்கு அடிமையாகி சொல்லச்சொல்ல கேட்காத மருமகன்.. கூலிப்படை வைத்து போட்டித்தள்ளிய மாமனார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருக்கும் வருசநாட்டிற்கு அருகேயுள்ள கடமலைக்குண்டு கிராமத்தை சார்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 45). இவரது மனைவியின் பெயர் சித்ரா (வயது 38). இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், செல்லப்பாண்டியனுக்கு மது அருந்தும் பழக்கமும், சீட்டு விளையாடும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த காரணத்தால் தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த செல்லப்பாண்டி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக கடமலைக்குண்டு கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். 

தனது குழந்தைகளை கண்டுவிட்டு கேரளாவிற்கு செல்வதாக கூறிய செல்லப்பாண்டி, மீண்டும் வீட்டிற்கு வரவும் இல்லை.. எந்த விதமான அலைபேசி தொடர்பும் கொள்ளவில்லை. இந்த விஷயம் தொடர்பாக சித்ராவிடம் செல்லப்பாண்டியின் சகோதரன் ராமராஜ் என்பவர் கேட்டுள்ளார். 

இந்த நேரத்தில், சித்ரா முன்னுக்கு பின்னர் முரணான பதிலை அளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த ராமராஜ், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணிக்கு சென்ற காவல் துறையினர், மற்றொரு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி கிஷோர் (வயது 26), நாகர்கோவில் அன்பு (வயது 35) மற்றும் செந்தில் (வயது 40) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், செல்லப்பாண்டியன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், போதைக்கு அடிமையான மருமகனை மாமனார் மகாராஜன் (வயது 66) கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, மகாராஜனை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni man murder by wife husband


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->