தேனி பட்டாசு தயாரிப்பில் தாய் - மகள் உயிரிழந்த விவகாரம்... வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சிகள்.!! 
                                    
                                    
                                   in Theni firework accident mother and daughter died  
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் திருவிழா மற்றும் விசேஷ காலத்தில் வெடி பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக இயற்கையை எய்தியுள்ளார். 
இதனையடுத்து இவரின் மறைவிற்கு பின்னர் மனைவி பாண்டியம்மாள் மற்றும் மகள் நிவிதா இருவரும் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல பட்டாசை தயாரித்து கொண்டு இருந்துள்ளனர். 

இவ்வாறு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகவே, பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இவரது மகள் நிவிதா பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, பெரியகுளம் காவல் ஆய்வாளர் நிவிதாவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற துவங்கிய நிவிதா சிகிச்சை பலனின்றி சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்னர் தீயணைப்பு படையினர் பிற இடிபாடுகளை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகளை காவல் துறையினர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       in Theni firework accident mother and daughter died