மனைவிக்கும், மகளிற்கும் வித்தியாசம் தெரியாத காமுக தந்தை.. காளியாக மாறி மகளை மீட்ட தாய்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பகுதியை சார்ந்தவர் மகேஷ் (வயது 41). இவர் இப்பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் கீதா. இவர்களுக்கு பவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 15 வயதுடைய மகள் இருக்கிறார். 

இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், மகேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், மகேஷ் அதிகளவு மது போதைக்கு அடிமையானவர். மகேஷ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் மகேஷ், தனது மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகளவு மது அருந்திய மகேஷ் வீட்டிற்கு போதையில் வந்து தகராறு செய்துள்ளான். 

பின்னர் அங்கிருந்த மகளை, தான் பெற்றெடுத்த மகள் என்றும் பாராது பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான். இதனால் அதிர்ந்து போன பானு கூச்சலிடவே, தாயார் பதறியபடி வீட்டிற்குள் வந்து தனது மகளை மீட்டுள்ளார். 

இதன்பின்னர் தனது கணவருடன் சண்டையிடவே, கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளான மகேஷ் மனைவி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.. இதனையடுத்து கீதா அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக புகார் அளித்துளளார். 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni father sexual torture for daughter police arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal