போக்சோ வழக்கு.. வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!
In the POCSO case the court sentenced the young man to 10 years in prison
திருச்செந்தூர் பகுதியில் 15 வயது சிறுமியை,பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது,
கடந்த 2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் குற்றவாளியானார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் குற்றவாளி இசக்கிராஜாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் , விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.மேலும் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
In the POCSO case the court sentenced the young man to 10 years in prison