தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு மழை.! அறிவிப்பை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய சென்னை வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் அளவானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. வெப்பத்தின் காரணமாகவும்., நமது முற்கால செயல்பாடுகளின் காரணமாகவும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று., வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில்., தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும்., தென் மேற்கு பருவமழையின் காரணமாகவும் பரவலானது மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. வரும் 24 மணிநேரத்தில் பெரம்பலூர்., கடலூர்., புதுச்சேரி., கரூர்., விழுப்புரம்., திருச்சி., கோயம்புத்தூர்., நீலகிரி., தேனி., திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

chennai, chennai weather report office, chennai weather report,

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்றும்., சில இடத்தில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும்., 24 மணிநேர நிறைவின் படி விழுப்புரம் மாவட்ட திருப்பத்தூரில் சுமார் 4 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளதாகவும்., நீலகிரி மாவட்ட தேவாலாவில் சுமார் 5 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதுமட்டுமல்லாது தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும்., தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனைப்போன்று வரும் 9 ஆம் தேதிக்கு பின்னர் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில்., சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilandu 10 district have rain chennai weather report announce


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->