மூலிகை சூப் வைத்து இலவசமாக வழங்கும் முதியவர்.. குவியும் பாராட்டுக்கள்..!! - Seithipunal
Seithipunal


பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கிராமப்புற மருத்துவமான சித்த மருத்துவம் கைகொடுத்து வருகின்றது. சமீபத்தில் நிலவேம்பு குடித்தால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தலாம் என்பதால் இன்று வரை அனைத்து இடங்களிலும் நோய்தொற்றுக்கு நிலவேம்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதுபோலவே கிராமங்களில் காய்ச்சல், நோய் தொற்று போன்றவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தூதுவளை, முடக்கத்தான் மற்றும் பல்வேறு மூலிகைகளை சூப்பாக வைத்து குடித்து வருகின்றனர். ஆவாரம்பூ கசாயம் பயன்படுத்தி கிருமிகள் மூலம் உருவாகும் நோய் தொற்றிலிருந்து தங்களை காத்து வருகின்றனர். 

இந்த நிலையில் புதுக்கோட்டை உணவகம் ஒன்றில் டெங்கு காய்ச்சலில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பொதுமக்களை தற்காக்க மூலிகைகளை சூப் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். 

கரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் இந்த நிலையில், கிருமிகளிடமிருந்து மக்களை காக்க சில நாட்களாக சொந்த செலவில் அந்த உணவகத்தின் உரிமையாளர் மூர்த்தி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சூப் கொடுத்து வருகின்றார்.

ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேருக்கு இலவசமாக வழங்கி வருகின்றார். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தாலே கிருமிகள் தோற்றாது. எனவே, இந்த சூப்களை மக்களுக்கு வழங்குகிறோம் என்று தெரிவிக்கின்றார் மூர்த்தி. ஒவ்வொரு நாளும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாமுண்டி இங்கே பார்வையிட்டு வருகின்றார். இதுபோலவே பல இடங்களிலும் கசாயம் வழங்கப்பட்டு வருகின்றது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai old man gives natural tea for avoid disease


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal