புதுச்சேரியில் மக்கள் மன்றம்..41 புகார்களுக்கு உடனடி தீர்வு எடுத்த அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையம் உள்ளது இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 41 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்வேறு காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மூத்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து புகார்களை நேரடியாக பெற்றனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:*மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 79 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 41 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். 

*இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 299 பொதுமக்கள் (60 மகளிர்) கலந்துகொண்டனர்.

*பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.

*நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOs) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

 

ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திருப்பணிக்கு  ஒரு லட்ச த்து 10 ஆயிரம் ரூபாய் சொந்த பணத்தில் இருந்து கோவில் நிலம் வாங்க நன்கொடையாக வழங்கினார்

உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இடம் விரிவாக்கம் மற்றும் திருப்பணிக்காக ஆலய நிர்வாகிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் முன்னாள் துணை சபாநாயகர் பாலன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தினை வழங்கினார்..

மேலும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் முன்னாள் துணை சபாநாயகர் பாலன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  பால் குக்கர்  வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்சியின் போது ஊர் தலைவர்கள், TK குமரகுரு, மூர்த்தி, சிவாஜி, கண்ணன், இராதாகிருஷ்ணன், விஜய், விநாயகம், புருஷோத், மாஃபாஸ், பூபாலன், மணிகன்டன் மற்றும் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Puducherry the peoples forum officials took immediate action on 41 complaints


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->