9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன்.. பெற்றோரிடம் கதறிய சிறுமி..! மயிலாடுதுறையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறை கோமல் கோலையூர் காலனி தெரு பகுதியை சார்ந்தவர் லட்சுமணன். இவனது மகனின் பெயர் சுரேஷ் மேனன் (வயது 21).

இவன் கொத்தனாராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று முன்தினத்தின் போது இப்பகுதியில் நடைபெற்று இருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 9 வயதுடைய சிறுமி வந்துள்ளார். 

சிறுமி பெற்றோரை விட்டு சிறிது தூரம் தள்ளி வந்து அமர்ந்திருந்த நிலையில், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்த காமுகன், சிறுமியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துபோன சிறுமி செய்வதரியாது திகைக்கவே, இறுதியாக சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in mayiladuthurai child sexual abuse police arrest culprit


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->