வாங்கிய கடனிற்கு அவகாசம்.. வீட்டை இடித்து நொறுக்கிய மதிமுக பிரமுகர்.! மதுரையில் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பிடாரி கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் குமார். இவர் தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இவர்களுடன் குமாரின் தாயாரும் வசித்து வந்த நிலையில்., இவர்களின் சொந்த இல்லம் இருந்துள்ளது. இந்த நிலையில்., கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக மதிமுக கட்சியை சார்ந்த நாகராஜன் என்பவரிடம் 5 பைசா வட்டிக்கு ரூ.2 இலட்சம் கடனாக பெற்றுள்ளார். 

இந்த கடன் தொகைக்கான அசல் மற்றும் வட்டியினை சரியாக செலுத்தாத நிலையில்., குடும்பத்தின் சூழல் காரணமாக ஒரு வருடம் அவகாசம் கேட்டுள்ளார். இந்த நேரத்தில்., குமாருக்கு பணி தொடர்பான அழைப்பு வந்துள்ளது. 

thoothukudi railway station, thoothukudi,

இதனை நம்பி தூத்துக்குடி சென்ற நேரத்தில் 15 பேர் கொண்ட கும்பலுடன் நாகராஜ் வீட்டிற்கு வந்து., குமாரின் தாயார் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு பொக்லைன் மூலமாக வீட்டினை இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். 

இது குறித்து தகவலறிந்த குமார் மீண்டும் மதுரைக்கு வந்து வீட்டின் நிலையை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., கந்துவட்டிக்கு விடுவது குற்றம் என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai house destroyed by mdmk party member


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal