நாலு சின்ன பசங்க சார்... பாக்கத்தான் இப்டி இருக்காங்க., என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!!  
                                    
                                    
                                   in krishnagiri child doing dengue awareness activity 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தாங்கரையை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில்., சுமார் 750 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில்., இப்பகுதியில் கொசு தொல்லையானது இருந்து வந்துள்ளது. 
மேலும்., இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான பலனும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து இதே பகுதியில் வசித்து வரும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சார்ந்த சூர்யா., பிரதீப்., ஷாஜகான் மற்றும் விஷ்வா ஆகிய நான்கு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். 

இவர்களின் திட்டப்படி., அப்பகுதி மக்களிடையே வீடு வீடாக சென்று மனுவில் கையொப்பம் பெற்று., இதன் நகல்களை தேர்வுநிலை பேரூராட்சி ஊழியர்களிடம் அளித்துள்ளனர். இந்த மனுவில் சிறுவர்கள் கூறியிருப்பதாவது.,  
எங்களின் தோழன் தர்சன் என்பவர் வித்யா விகாஸ் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த சமயத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் நோய்வாய்ப்பட்ட நண்பன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

இதனைப்போன்று மீண்டும் யாரும் எங்களை பிரிந்து செல்ல கூடாது.. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்த விடியோக்காட்சிகள் மற்றும் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       in krishnagiri child doing dengue awareness activity