காவல் அதிகாரி வில்சன் கொலை வழக்கில்... வெளியான பேரதிர்ச்சி தகவல்... கைதான பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வில்சன், இவர்   பட்ந்தாலுமூடு அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ய அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் 3  ரவுண்ட் சுட்டுள்ளனர். 

இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் மயங்கி விழுந்தார். துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட பிற காவலர்கள் வருவதற்குள் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த ஆய்வாளர் வில்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்கள் பயங்கரவாதிகள் என்ற தகவல் வெளியானது. 

இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பயங்கரவாத இயக்கத்தினை சார்ந்த ஆதரவாளர்களை கைது செய்த நிலையில்., இந்த கொலை சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த நபரை பெங்களூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இஜாஸ் பாஷா 4 துப்பாக்கிகளை மும்பையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த குற்றத்திற்கு 4 துப்பாக்கிகள் முதலில் வாங்கப்பட்டு இரண்டு துப்பாக்கிகள் மூலமாக காவல் அதிகாரியை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்., இது தொடர்பான விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாதிகள் ஆயுதத்தை கடத்த முயற்சித்த நேரத்தில் காவல் அதிகாரி வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் குடியரசு தினத்தன்று டெல்லி மற்றும் குஜராத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. 

இந்த விசயத்திற்கு சுமார் 17 பேர் அடங்கிய கும்பலுடன் பயங்கரவாதிகள் களமிறங்கியுள்ளதாகவும், மொத்த 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari police officer murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->