இளம்பெண்ணை நாடககாதலால் ஏமாற்றி கொடூர கொலை?.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஒன்றியத்தில் இருக்கும் ஆண்டிசிறுவள்ளூர் பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் ரோஜா. இவர் இதே பகுதியில் இருக்கும் காரை என்ற கிராமத்தில் வசித்து வந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

ராஜேஷ் ஏற்கனவே காதல் திருமணம் செய்திருந்த நிலையில்., முதல்திருமணத்தை மறைத்து ரோஜாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்., கடந்த 21 ஆம் தேதியன்று திருமணம் செய்வதாக ராஜேஷ் - ரோஜாவுக்கு வாக்குறுதி அழைத்துள்ளார். 

இதனையடுத்து காதலனுடன் கடந்த 21 ஆம் தேதியன்று ரோஜா சென்ற நிலையில்., ஐந்து நாட்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். பின்னர் 26 ஆம் தேதியன்று ரோஜாவின் தம்பிக்கு தொடர்பு கொண்ட ராஜேஷ், ரோஜாவை அங்குள்ள சிறுவாக்கம் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு., உனது தங்கையுடன் நான் வாழமாட்டேன் என்று கூறியுள்ளான். 

died, murder, killed, suicide attempt,

மேலும்., கடந்த 21 ஆம் தேதியன்று தனது மகளை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் ரோஜாவின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்., அங்குள்ள சிறுவாக்கம் அருகேயுள்ள தோட்டத்தில் ரோஜா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண் மரத்தில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில் ரோஜா என்பது தெரியவந்ததை அடுத்து., இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanchipuram girl attempt suicide police investigation going on


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal