வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்., சிறுவன் பரிதாப பலி.! அதிஷ்டவசமாக தப்பித்த குடும்பம்.!! சென்னையில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பாரிமுனை (பாரிஸ் கார்னர்) சண்முகராயன் தெருவில்., இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ள பழைமையான 10 ஓட்டு வீடுகளானது உள்ளது. இந்த வீட்டில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில்., இங்குள்ள வீட்டில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். 

இவர் கோயம்பேடு மார்க்கட்டில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு கலைவாணி (வயது 35) என்ற மனைவியும்., மெர்சி என்ற 10 வயதுடைய குழந்தையும்., ஆலன் (வயது 8) என்ற குழந்தையும் உள்ளனர். ஆலன் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. 

இவர்கள் வசித்து வந்த இல்லம் பழைமையான வீடு என்பதாலும்., மேற்கூரை மழையில் நனைந்து ஈரப்பதமாக இருந்த நிலையில்., இன்று அதிகாலையில் சுரேஷ் பணிக்கு செல்வதற்காக வீட்டினை விட்டு வெளியே வந்தார். இந்த தருணத்தில்., எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை தீடீரென இடிந்து விழுந்துள்ளது. வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த கலைவாணி, மெர்சி மற்றும் ஆலன் மீது கூரை விழுந்தது. 

died, killed, murder, suicide attempt, கொலை, தற்கொலை,

இந்த விபத்தில் ஆலன் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., மீதமுள்ள இருவரும் படுகாயமடைந்து அலறினர். இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த கலைவாணி மற்றும் மெர்சியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., இது குறித்து காவல் துறை மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர்., இடிபாடுகளை அகற்றி ஆலனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Chennai cute boy died collapse home upper roof


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->