முறியடிக்கப்பட்ட சதித்திட்டம்! நாட்டின் தலைநகரில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகள் கூண்டோடு சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் பதுங்கியிருப்பதுடன், முக்கிய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.இதையடுத்து உஷாரடைந்த காவலர்கள், நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பில் இருந்ததாகவும், டெல்லியின் முக்கிய பகுதிகளில் தொடர் தாக்குதல்களை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வரும் காவலர்கள், இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள வலையமைப்பை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தலைநகர் பாதுகாப்பு அமைப்புகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

foiled plot How did 9 terrorists hiding nation capital end up trapped cage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->