'பதில் சொல்வாரா ஜோசப் விஜய்'...? - தவெக நிர்வாகிகள் மீதான புகார்களைக் கையில் எடுத்து டிடிவி தினகரன் அதிரடி அட்டாக்...!
Will Joseph Vijay answer TTV Dhinakaran takes up complaints against tvk administrators and launches attack
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம், வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளியிடம் இலவசமாக செங்கல் ஜல்லி கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் மற்றும் செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட கடந்த ஒரு வாரத்தில் அரங்கேறிய பல்வேறு குற்றச் செயல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்திலும் தொடர்புடையவர்களாக தவெக நிர்வாகிகள் பெயர் அடிபட்டிருப்பது கவலைக்குரிய ஒற்றுமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்தான் தவெகவில் அதிகமாக இடம்பெற்றுள்ளனரா? அல்லது ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் சட்டத்தை மீறத் துணிகிறார்களா?" என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பதிவு அரசியல் அரங்கில் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Will Joseph Vijay answer TTV Dhinakaran takes up complaints against tvk administrators and launches attack