நள்ளிரவில் காரில் காத்திருந்த தொழிலதிபரை கடத்திய சோகம்.!! பதைபதைப்பு பின்னணி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள ஐயப்பாக்கம் பச்சையப்பன் நகரில் இருக்கும் பகுதியை சார்ந்தவர் முகேஷ். இவர் தொழிலதிபராக இருந்து வரும் நிலையில்., எம்.எம்.லாஜிஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இவருக்கு சொந்தமாக சென்னையில் நான்கு கிளைகள் உள்ள நிலையில்., திருச்சியில் இருந்து லாரியில் வரும் பொருட்களை பார்வையிடுவதற்காக நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் வில்லிவாக்கம் ஐசிஎப் சாலையில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 

இதனையடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரில் அமர்ந்திருந்த நிலையில்., 3 மர்ம நபர்கள் காரில் வருகை தந்து தங்களிடம் பேச வேண்டும் என்று கூறி முகேஷை காரில் ஏற்றிக்கொண்டு அவரின் விலையுயர்ந்த அலைபேசியை பறித்துக்கொண்டுள்ளனர்.

kidnapped,

பின்னர் முகேஷை கத்தியை காட்டி மிரட்டிய நிலையில். மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடை நோக்கி கார் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., இக்கும்பலில் இருந்த ஒருவன் தான் பிரபல ரவுடி தில் பாண்டி என்றும்., எனக்கு ரூ.30 இலட்சம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த முகேஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில்., காரில் இருந்த பீர் பாட்டிலை வைத்து முகேஷை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த முகேஷ் காரில் இருந்து தப்பி சென்றுள்ளார். 

maduravoyal, chennai maduravoyal, maduravoyal chennai images,

காரினை நிறுத்திய தில்பாண்டி கடத்தல் கும்பல் முகேஷை விரட்டி சென்ற நிலையில்., காவல் நிலையத்திற்கு அருகே முகேஷ் சென்றதும் கடத்தல் கும்பல் தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். 

பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு காமிராவை வைத்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தில் பாண்டியின் கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai business man kidnapped police investigation


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal