டிக் டாக் செயலில் காதல் வலை...! 13 வயதாகும் சிறுமிக்கு நேர்ந்த அவலம்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலநிலையில் பெரும்பாலானோர் இணையங்களில் உள்ள செயலியை பயன்படுத்தி தங்களின் வெளிப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்., குறுகிய நேரத்தில் அதிகளவு மக்களிடையே அறிமுகமாகி., இன்று வரை பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பெற்று பயன்பாட்டில் இருக்கும் செயலி டிக் டாக் செயலியாகும். 

இந்த செயலியை ஆண்களை விட தற்போது அதிகளவு பெண்கள் உபயோகம் செய்து வருகின்றனர். தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வீடியோ பதிவுகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியர்கள் அதிகளவு உபயோகம் செய்து வருகின்றனர். இதன் பாதிப்புகளை உணர்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இந்த செயலியை தடை செய்ய கூறி வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க ஆபாசமான பாடல்கள் மற்றும் பேச்சுகளுக்கு கவர்ச்சியான நடனம் என்று விடீயோக்களும் வெளியாகி பெரும் வைரல் ஆகி வருகிறது. இணையதளத்தை பொறுத்த வரையில் பல விதமான நன்மைகள் நடந்தாலும்., சில குற்ற சம்பவங்களுக்கு பெரும் துணையாக இருந்து வருகிறது. இணையத்தில் இருக்கும் ஆண் நபர்களை நேரில் பார்த்து பழகாமலேயே நல்லவர்கள் என்று எண்ணி ஏமார்ந்து பல பெண்களின் வாழ்க்கையும் துயரமாக இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள அரும்பாக்கம் அருகேயுள்ள சிவசுப்பிரமணியம் கோவில் பகுதியை சார்ந்த 13 வயதுடைய மாணவி., அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில்., தனது தாயார் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., மாணவி கடந்த 30 ஆம் தேதியன்று திடீரென மாயமாகியுள்ளார். 

இவரை தேடி அலைந்த பெற்றோர் மாணவியை காணாது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., நேற்று வாலிபர் ஒருவருடன் இல்லத்திற்கு மீண்டும் திருப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்த அசாருதீன் என்ற வாலிபர்., டிக் டாக் செயலி மூலம் பழக்கமாக்கி., காதல் வலையில் விழ வைத்து., கடந்த 10 நாட்களாக மாணவியை அரக்கோணத்திற்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai 13 year old girl misused by tic tok love proposal by vellore youngster


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal